மஸ்ரூம் றைஸ் - Mushroom Rice

தேவையான பொருட்கள் : 


2 பேருக்குப் போதுமானது


பசுமதி அரிசி  :- 1 சுண்டு

நெய்  :- 3 மே.க.

மிளகு   :- 10

கறுவா  :- 4 துண்டு

கராம்பு  :- 10

ஏலம்       :- 10

பம்பாய் வெங்காயம்     :- 1

போஞ்சி     :- 50 கிராம்

கரட்     :- 50 கிராம்

கோவா  :- 50 கிராம்

காளான் ( மஸ்றூம் ) :- 50 கிராம்




செய்முறை : 


  • வெங்காயம், கரட், கோவா, போஞ்சி, காளான் என்பவற்றைத் துப்புரவு செய்து தனித்தனியாக அளவான சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.


  • தாச்சியில் நெய்யைவிட்டு உருகியபின், அதனுள் மிளகு, கறுவா, கராம்பு, ஏலம் என்பவற்றையிட்டுப் பொரியவிடவும். 

  • அவை பொரிந்துவரும்போது வெங்காயம், கரட், போஞ்சி என்பவற்றையிட்டு வதங்கவிடவும்.


  • பின்பு அரிசியைக் கழுவி வதங்கிய கலவையிலிட்டு நன்கு கிளறிச் சேர்த்துக் கொண்டபின் 2 தம்ளர் தண்ணீர்விட்டு கோவா, காளான், அளவிற்கு உப்பு என்பவற்றைச் சேர்த்து மூடி அவியவிட்டு அரிசி அவிந்துவரும்போது இறக்கி வாயகன்ற பாத்திரத்தில் கொட்டிப் பரவி விடவும்.

Comments