மில்க் கேக் - Milk Cake


தேவையானவை : 


பால் - ஒரு லிட்டர் 

சர்க்கரை - அரை கப்

நெய் - அரை கப் 

வினிகர் - 2 டீஸ்பூன் 




செய்முறை : ✒

முதலில் , பாலில் பாதியளவு எடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள் . 

பால் கொதிக்கும்போது , அதில் வினிகரைச் சேருங்கள் . 

உடனே பால் திரிந்துவிடும் . திரிந்த பாலை ( சாதாரண வடிகட்டியில் ) வடிகட்டுங்கள் . 

பனீர் ரெடி ! மீதியுள்ள பாலை ஒரு கனமான பாத்திரத்தில் மிதமான தீயில் காய்ச்சுங்கள் . 

காயும் பாலில் பனீரைச் சேருங்கள் . 

இது பாதியாகச் சுண்டியதும் சர்க்கரையைப் போட்டு , சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்து , விடாமல் நன்கு கிளறுங்கள் . 

பால் நன்கு சேர்ந்து கெட்டியாகி , நெய் பிரிந்து வரும்வரை கிளற வேண்டும் .

பிறகு , ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டில் கொட்டிச் சமப்படுத்தி , மற்றொரு தட்டால் நன்கு மூடி , சற்றுச் சாய்வாக வையுங்கள் . 

அதிகப்படியான நெய் வடிந்துவிடும் . இரண்டிலிருந்து மூன்று மணி நேரம்வரை ஆறவிடுங்கள் . 

பின்னர் அதை துண்டுகள் போடுங்கள் விருப்பப்பட்டால் சீவி , வறுத்த பாதாமை அதன்மீது தூவி அலங்கரிக்கலாம் . 


குறிப்பு : 

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டில் வைத்தால்தான் பால் சூட்டில் தட்டும் சூடாகி , கேக்கின் அடிப்புறம் சிவந்தும் , மேலே பொன்னிறத்திலும் , டபுள் கலரில் பார்க்க சூப்பராக இருக்கும் பார்க்க மட்டுமல்ல சாப்பிடவும்தான் !

Comments