குல்ஃபி - Kulfi


தேவையானவை : 


பால் 2 லிட்டர் 

சர்க்கரை - 200 கிராம் 

முந்திரி - 20 

பாதாம் - 20 

ஸ்வீட் பிரெட் - 4 துண்டங்கள் , 

ஜெலட்டின் ( சர்க்கரை போல இருக்கும் - கடைகளில் கிடைக்கும் ) - 2 டீஸ்பூன்

ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன் . 




செய்முறை : ✒


பிரெட் துண்டங்களின் ஓரங்களை நீக்கிவிடுங்கள் . 

பாலை அடுப்பில் வைத்து , பாதியாகும் வரை நன்கு காய்ச்சுங்கள் . 

பின்னர் சர்க்கரை சேருங்கள் . 

சர்க்கரை கரைந்து , மீண்டும் கொதிக்கும் போது , பிரெட்டை உதிர்த்துச் சேருங்கள் . 

ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள் . 

பாதாமை , கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு எடுத்து , தோலை உரித்தெடுங்கள். 

முந்திரி , பாதாமை சிறிது பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்கு அரையுங்கள். 

அரைத்த விழுதைக் காய்ந்த பாலில் சேருங்கள் . 

கால் கப் தண்ணீரில் ஜெலட்டினைக் கரைத்து , பால் கலவையில் சேருங்கள் . 

ஏலக்காய்த் தூளையும் கலந்து கொள்ளுங்கள் . 

ஆறியதும் , குல்ஃபி மோல்டுகள் அல்லது கிண்ணங்களில் ஊற்றி , ஃப்ரீஸரில் வைத்து , நன்கு குளிர்ந்ததும் பரிமாறுங்கள்.

Comments