(இதில் 6 சாண்ட்விச் செய்யலாம்)
பாண் - 1 இறாத்தல்
கரட் - 100 கிராம்
பீற்றூட் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 200 கிராம்
உப்புத்தூள் - அளவிற்கு
மிளகுதூள் - அளவிற்கு
மாஜரீன் - 100 கிராம்
பச்சைக்கலரிங் - 1 தேக்கரண்டி
செய்முறை :- ✒
- பாணின் சுற்றிவரவுள்ள கரைப்பகுதிகள் யாவற்றையும் வெட்டி நீக்கிவிட்டு , நடுப்பகுதியை மட்டும் பன்னிரண்டு சமமான துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும் .
- அல்லது சான்ட்விச் பாணைப் பயன்படுத்தவும் .
- பீற்றூட் , கரட் , உருளைக்கிழங்கு என்பவற்றைத் தோல் நீக்கித் துப்பரவாக்கி கழுவித் தனித்தனியாக அவிக்கவும்.
- பின்பு பீற்றூட்டைத் தனியாக எடுத்து ஸ்கிறேப்பரில் துருவி நீரை ஓரளவு பிழிந்து நீக்கிக் கொண்ட பின்பு அதனுள் 1 தே.க மாஜரின் , உப்புத்தூள் , மிளகு தூள் என்பவற்றை அளவிற்கு இட்டுச் சேர்த்து வைத்துக்கொள்க .
- அதேபோன்று கரட்டையும் தனியாகத் துருவி நீரை ஓரளவு பிழிந்து நீக்கிக் கொண்ட பின்பு 1 தே.க மாஜரீன் , உப்புத்தூள் , மிளகுதூள் இட்டுச் சேர்த்து வைத்துக் கொள்க .
- உருளைக்கிழங்கை வேறொரு பாத்திரத்திலிட்டு மசித்து இடியப்ப உரலிலிட்டுப் பிழிந்தெடுத்து அதனுள்ளும் ஒரு தேக்கரண்டி மாஜரின் , உப்புத்தூள் , மிளகுதூள் பச்சைக்கலரிங் என்பன அளவிற்கு இட்டுச் சேர்த்து வைத்துக் கொள்க .
- பின்பு மிகுதியாகவுள்ள மாஜரினைப் பாண் துண்டுகளின் ஒரு பக்கத்திற்கு மட்டும் பூசிக் கொள்க .
- பின்பு மாஜரின் பூசிய ஆறு பாண் துண்டுகளை எடுத்து ஒவ்வொரு பாண் துண்டிற்கும் முதலில் பரவலாக உருளைக்கிழங்குக் கலவையையும் , அதன் மேலே பரவலாகப் பீற்றூட் கலவையையும் , அதன்மேலே பரவலாக கரட் கலவையையும் பூசி , மற்ற பாண் துண்டினால் மூடி அழுத்திக் கொள்ளவும்.
- அதன் பின் 1 மணி நேரம்வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தெடுத்து ஒவ்வொரு பாண் துண்டையும் மூலைக்குக் குறுக்காக வெட்டி இரண்டு முக்கோணத் துண்டுகளாக்கி பரிமாறலாம் .
குறிப்பு 📌
- சான்விச் பிறட்டை வாங்கி மேலே கூறியதுபோல் கலவைகளைப் படையாகப் பூசிக்கொண்டபின் பாய்போலச் சுற்றியெடுத்து , ஓர் ஒயில் பேப்பரில் வைத்து இறுகச்சுற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து , பின்பு வில்லைகள் போல் வெட்டி எடுத்துப் பரிமாறலாம் . இது Pin Wheel சான்ட்விச் எனப்படும் .

Super 👍
ReplyDelete