பால் அல்வா செய்யும் முறை - How to make Milk Halwa




தேவையானவை

பால் - 4 கப்

சர்க்கரை - 2 கப்

நெய் - 1 கப்

ரவை - அரை கப்

சீவிய பாதாம் - 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் கலர் - ஒரு சிட்டிகை


செய்முறை✒...

சிறிய கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி,சீவிய பாதாமை லேசாக வறுத்து வைத்துக்கொள்ளுங்கள். 

பிறகு மேலே சொல்லியிருக்கும் மற்ற பொருள்களை எல்லாம் ஒன்றாகக் கலந்து அடி கனமான பாத்திரம் ஒன்றில் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறுங்கள்.

இந்தக் கலவை சற்று சேர்ந்து வரும்போது நெய் பிரியும். அப்போது தீயைக் குறைத்து கலவை நன்கு சுருண்டு வரும்வரை விடாமல் கிளறி கடைசியில்,வறுத்து வைத்திருக்கும் பாதாமை சேர்த்துக்கிளறி இறக்குங்கள்.

இதைத்தட்டில் பரப்பி துண்டுகளாகவும் போடலாம் அல்லது ஸ்பூனில் எடுத்தும் பரிமாறலாம். 


குறிப்பு : ஒரு கப் அளவு என்பது 200 மில்லி அல்லது 200 கிராம் அளவைக் குறிக்கும்.

Comments