தேவையான பொருட்கள் :
(இது 4 பேருக்கு போதுமானது)
சம்பா அரிசி - 1/2 கிலோ கிராம்
கரட் - 125 கிராம்
லீக்ஸ் - 125 கிராம்
உருளைக்கிழங்கு - 125 கிராம்
போஞ்சி - 125 கிராம்
கோவா - 125 கிராம்
தக்காளிப்பழம் - 125 கிராம்
கஜு - 50 கிராம்
பிளம்ஸ் - 50 கிராம்
மாஜரின் - 50 கிராம்
உப்புத்தூள் - தேவையான அளவு
மிளகுதூள் - தேவையான அளவு
பச்சைப் பட்டாணிக்கடலை - 100 கிராம்
இறால் - 1/2 கிலோ கிராம்
சிலி சோஸ் - 1 மேசைக்கரண்டி
சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - 1 மேசைக்கரண்டி (நிரப்பி)
சிறிதாக வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி (நிரப்பி)
சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் - 1 மேசைக்கரண்டி (நிரப்பி)
கறுவா - ( 2 " நீளம் )
ஏலம் - 10
கராம்பு - 10
மிளகு - 10
உள்ளி - 3 பல்லு
மஞ்சள்த்தூள் - 2 சிட்டிகை
தேசிப்புளி - 1 மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 1/4 போத்தல்
செய்முறை :
- இறாலைத் துப்புரவு செய்து உப்புத்தூள்,சிலிசோஸ் போட்டு புரட்டி பொரித்தெடுக்க வேண்டும்.
- முதலில் கறுவா,ஏலம்,கராம்பு,உள்ளி,மிளகு என்பவற்றை இடித்து ஒரு மெல்லிய துணியில் பொட்டலமாகக் கட்டி வைக்கவும் .
- கடலையைத் துப்புரவாக்கி மூன்று மணி நேரம்வரை ஊற வைக்குக .
- பின்பு பானையில் நீரைக் கொதிக்க வைத்து , அரிசியைக் கழுவிப்போட்டு , கடலையையுமிட்டு அதனுடன் பொட்டலத்தையும் மஞ்சள்த் தூளையும் போட்டு அவியவிட்டு அரிசி அவிந்ததும்,பொட்டலத்தை எடுத்துவிட்டு வடித்து இறக்கி ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி தேசிப்புளியும் விட்டுக் கிளறி ஆறவிடவும் . ( தண்ணீர் அளவாக வைத்து புழுங்க வைத்துக் கொள்ளலாம் . )
- கரட்,போஞ்சி,லீற்ஸ்,உருளைக்கிழங்கு என்பவற்றை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் .
- கோவாவையும் தக்காளிப் பழத்தையும் தனித்தனியாகச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- கஜுவைப் பாதித் துண்டுகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு தாச்சியை அடுப்பில் வைத்து மாஜரினை இட்டு உருகவிட்ட பின் கஜு,பிளம்ஸ் என்பவற்றைத் தனித்தனியாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
- தாச்சியில் மிகுதியாக உள்ள மாஜரினில் வெட்டிய வெங்காயம் . பச்சைமிளகாய்,கறிவேப்பிலை என்பவற்றைப் போட்டு சிறிது வதக்கவும்.
- பின்பு அதனுள் மரக்கறிகளையும் போட்டு மூடி வதங்கவிட்டு முக்கால் பதமாக வதங்கியபின் வெட்டி வைத்துள்ள கோவா,தக்காளிப்பழம்,கடலை,மிளகுதூள்,உப்புத் தூளையும் சேர்த்து மூடி வதங்கவிட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஆறவைத்துள்ள சோற்றினில் வதக்கிய மரக்கறி வகைகள் , பொரித்த இறால்,பொரித்த கஜு,பிளம்ஸ் என்பவற்றையிட்டு நன்கு சேர்த்துக் கொள்க
குறிப்பு :- 📌
- மரக்கறி வகைகளை எண்ணெயில் வதங்க வைப்பதற்குப் பதிலாக நீராவியில் அவித்தெடுத்து சிறிது நேரம்,வெங்காயத்துடன் சேர்த்து வதங்கவிட்டும் பயன்படுத்தலாம்.

Comments
Post a Comment