பால் பொங்கல்


தேவையானவை : 


பால் - 1 லிட்டர் , 

பாஸ்மதி அரிசி 1 கப் , 

பாசிப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன் , 

நெய் 3 டேபிள்ஸ்பூன் , 

சீவிய முந்திரி 2 டேபிள்ஸ்பூன் , 

சர்க்கரை ( அல்லது ) வெல்லம் ஒன்றரை கப் , 

ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன் , 

குங்குமப்பூ 1 சிட்டிகை . 




செய்முறை : ✒


பாலுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து , அடுப்பில் வைத்து காய்ச்சுங்கள் . 

அரிசி , பருப்பைக் கழுவி , அடுப்பிலிருக்கும் பாலோடு சேருங்கள் . 

மிதமான தீயில் நன்கு வேகவிடுங்கள் . 

அரிசி நன்கு குழைந்து வெந்தபின் சர்க்கரை சேருங்கள் . 

( சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்ப்பதானால் , பொடித்த வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து , வெல்லம் கரையும் வரையில் கொதிக்கவைத்து வடிகட்டி , வெந்து கொண்டிருக்கும் பால் , அரிசி கலவையில் சேர்க்கலாம் . )

நன்கு சேர்ந்து வரும்வரையில் கிளறி , இறக்குங்கள் . 

குங்குமப் பூவை , சிறிது சூடான பாலில் கரைத்து , சேருங்கள் . 

முந்திரியை சிறிது நெய்யில் வறுத்துப் பொங்கலில் போட்டு , கடைசியில் மீதமுள்ள நெய் , ஏலக்காய் சேர்த்து , நன்கு கிளறிப் பரிமாறுங்கள் .

Comments