தேவையானவை :
பால் - 1 லிட்டர் + அரை கப்
சர்க்கரை - அரை கப்
வெண்ணெய் - 50 கிராம்
கார்ன்ஃப்ளார் - 2 டேபிள் ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
செய்முறை : ✒
ஒரு லிட்டர் பாலை பாதியளவு வருமாறு வற்றக் காய்ச்சுங்கள்.
அத்துடன் சர்க்கரை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள் .
பின்னர் , அரை கப் பாலில் கார்ன்ஃப்ளாரைக் கரைத்து கொதிக்கும் பாலுடன் சேருங்கள் .
அத்துடன் வெண்ணெயையும் சேருங்கள் .
2 நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்து விட்டு வெனிலா எசன்ஸை சேருங்கள் .
நன்கு ஆறவிடுங்கள் .
ஒரு மரக்கரண்டியாலோ அல்லது முட்டை அடிக்கும் கருவியாலோ இந்தக் கலவையை நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.
இதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஃப்ரீஸரில் வைத்து பாதியளவு செட் ஆனவுடன் வெளியில் எடுத்து திரும்பவும் ஒருமுறை அடியுங்கள்.
மறுபடியும் ஃப்ரீஸரில் வைத்து குளிரவிட்டு , கிண்ணங்களில் எடுத்துப் பரிமாறுங்கள் .

Comments
Post a Comment