தேவையான:
பச்சரிசி - அரை கப்
உளுத்தம்பருப்பு - அரை கப்
பால் - 1 லிட்டர்
தேங்காய்ப்பால் - 1 கப்
சர்க்கரை அரை டீஸ்பூன்
உப்பு முக்கால் கப்
ஏலக்காய்தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை : ✒
அரிசியையும் உளுத்தம்பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து , நைஸாக அரைத்து ( வடைமாவு பதத்தில் ) , கடைசியில் உப்பைச் சேர்த்து நன்கு அரைத்தெடுங்கள் .
பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சி , கால் பாகம் வற்றிய பிறகு , சர்க்கரை சேர்த்து , மேலும் 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்குங்கள் .
அதில் , ஏலக்காய்த் தூள் , தேங்காய்ப்பால் சேர்த்து கலந்துவையுங்கள் .
கடாயில் எண்ணெயை காயவைத்து , அரைத்து வைத்துள்ள மாவிலிருந்து சிறிதளவு எடுத்து , சுண்டைக்கையளவு கிள்ளி , எண்ணெயில் போட்டு , வெந்தவுடன் ( சிவந்துவிடாமல் ) எடுங்கள் .
எல்லா மாவையும் இதேபோல் பொரித்து வைத்துக்கொள்ளுங்கள் .
பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பாக இந்தப் பணியாரங்களை , ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் பாலில் கலந்து பரிமாறுங்கள் .
இது செட்டிநாட்டு ஸ்பெஷல் ஸ்வீட் .
குறிப்பு :
மாவில் சிறிதளவேனும் அரிசியோ , உளுத்தம்பருப்போ அரைபடாமல் இருந்தால் பணியாரம் வெடிப்பதற்கு வாய்ப்புண்டு எனவே , அரைக்கும்போதே மாவை அடிக்கடி தள்ளிவிட்டு , நன்கு அரையுங்கள் .

Comments
Post a Comment